சென்னை

ன்று கோவாக்சின் இரண்டாம் டோஸ் மட்டும் போடப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

நாடெங்கும் விரைவில் கொரோனா மூன்றாம் அலை பரவலாம் என்னும் அச்சுறுத்தல் காரணமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.   மத்திய அரசு மொத்தமாக மருந்துகளைக் கொள்முதல் செய்து மாநிலங்களுக்குப்  பிரித்து அளிக்கிறது.

மத்திய அரசு கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரு மருந்துகளை அனுப்புகிறது.   இவை இரண்டு டோஸ்கள் செலுத்தப்பட வேண்டியவை ஆகும்.   அதே வேளையில் இரு டோஸ்களும் ஒரே மருந்தாக இருக்க வேண்டும்.    இதில் கோவாக்சின் மருந்து குறைந்த அளவில் உற்பத்தி ஆகிறது.

இந்நிலையில் இன்று சென்னையில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.  இதில் இரண்டாம் டோஸ் போட்டுக்கொள்பவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.