துரை

ன்றுடன் மதுரை ஜல்லிக்கட்டு ஆனலைன் முன்பதிவு நிறைவடைகிறது.

மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரத்தில் வருகிற 14-ந்தேதியும், பாலமேட்டில் 15-ந்தேதியும், அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் நடக்கிறது.

இந்த 3 இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று மாலை தொடங்கியது .

காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் madurai.nic.in என்ற இணையதள முகவரி மூலமாக தங்களது பெயர்களை பதிவு செய்து வருகின்றனர்.

இன்று மாலை 5 மணி வரை இந்த ஆன்லைன் முன்பதிவு இன்றுடன் நிறைவு பெற உள்ளது .