சென்னை

ன்று நாடெங்கும் மருத்துவப் பட்டப்படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடைபெறுகிறது.

இன்று தமிழ்நாட்டில் 31 நகரங்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் நீட்  தேர்வு எழுதுகின்றனர்  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1 லட்சத்து 47 ஆயிரத்து 581 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.   இதில் 95 ஆயிரத்து 823 மாணவிகளும், 51 ஆயிரத்து 757 மாணவர்களும் அடங்குவர்.

தமிழகம் முழுவதும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, மதுரை, கடலூர், கரூர், திருச்சி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், உதகை உள்ளிட்ட 31 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது

இன்று பிற்பகல் 2 மணி முதல் நடைபெறும் தேர்வினை எழுத மொத்தம் 20 லட்சத்து 87 ஆயிரத்து 445 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டைவிட 2 லட்சத்து 57 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.

11 லட்சத்து 84 ஆயிரத்து 502 மாணவிகளும், 9 லட்சத்து 2 ஆயிரத்து 930 மாணவர்களும் நீட் தேர்வினை எழுத விண்ணப்பித்துள்ளனர்.

தற்போது வன்முறை வெடித்த மணிப்பூரில் மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்த மாணவர்களுக்கு மட்டும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் சுமார் 5 ஆயிரத்து 751 மாணவர்கள் தேர்வு எழுத 2 மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன.  இங்குள்ள அசாதாரண சூழலால் மாணவர்களின் நலன் கருதித் தேர்வை ஒத்திவைக்க மத்திய இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் பரிந்துரைத்தார்.

அதனடிப்படையில், மணிப்பூரில் மட்டும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகத் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. பின்னர் தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.