இந்திய கொரோனா தடுப்பூசி கொள்கையின் முதல் வெற்றி : இன்று ஒரே நாளில் 80.96 லட்சம் தடுப்பூசிகள்

Must read

டில்லி

ன்று ஒரே நாளில் 80.96 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இந்தியாவின் கொரோனா தடுப்பூசி கொள்கைக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததால் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கியது.  இதில் முதல் கட்டமாகச் சுகாதார மற்றும் மருத்துவப் பணியாளர்கள், கொரோனா முன்கள பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது.  இரண்டாம் கட்டமாக 60 வயதை தாண்டியோருக்கும் அதன் பிறகு 45 வயதைத் தாண்டியவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.,

தற்போதைய மூன்றாம் கட்டத்தில் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.   முதலில் மாநில அரசுகள் தங்கள் தேவைகளுக்கேற்ப நேரடி கொள்முதல் செய்து கொள்ள அனுமதி அளித்த இந்திய அரசு அனைத்து மக்களுக்கும் இலவச தடுப்பூசி போடப்படும் எனவும் அதற்கான மருந்துகளை மத்திய அரசே நேரடியாக் கொள்முதல் செய்யும் எனவும் அறிவித்தது.

இன்று ஒரே நாளில் அதாவது இரவு 8 மணி வரை இந்தியா முழுவதும் 80.96 லட்சம் பேருக்குத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.  இது இந்தியத் தடுப்பூசி கொள்கைக்குக் கிடைத்துள்ள முதல் வெற்றி எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.  இதற்கு முன்பு ஏப்ரல் தொடக்கத்தில் 43 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு இருந்தன

இதில் 55 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் 18-44 வயது உள்ளவர்களுக்குப் போடப்பட்டது.   இந்த வயது பிரிவில் இதுவரை இவ்வளவு ஊசிகள் போடப்பட்டது இல்லை.  இதில் பாஜக ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் 50% அதிகமாக இன்று தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.  இதில் மத்தியப் பிரதேசத்துக்கு மிகவும் அதிகமாக 15 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இன்று ஒரே நாளில் 80 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டதற்குப் பிரதமர் மோடி தனது டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

More articles

Latest article