சென்னை:
சென்னையில் இன்று ஒரே நாளில் மேலும் 62 இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மொத்த கட்டுப்பாட்டு மண்டலங்கள் 419 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. அதன்மூலம் சென்னை உள்பட அண்டை மாவட்டங்களிலும் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே சென்னையில் கொரோனா தாக்கம் காரணமாக 357 பகுதிகள் முழுமையாக மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மேலும் 62 பகுதிகளில் கொரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அந்த பகுதிகளும் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, மொத்த கட்டுப்பாட்டு மண்டலங்கள் 419 ஆக அதிகரித்துள்ளது.