கடலூர்:

டலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

A doctor wearing a protective gear takes a swab from a woman to test for coronavirus disease (COVID-19), in Dharavi, one of Asia’s largest slums, in Mumbai, India, April 9, 2020. REUTERS/Francis Mascarenhas

தமிழகத்தில் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62,087ஆக அதிகரித்துள்ள நிலையில் பலி எண்ணிக்கையும் எண்ணிக்கை 794ஆக அதிகரித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில், நேற்றைய நிலவரப்படி (22ந்தேதி) 823 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இவர்களில்  492 பேர் நோய் தொற்றில்இருந்து குணமடைந்து இருப்பதாகவும், 328 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 3 பேர் பலியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இன்று மேலும் 60 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால்  மொத்த பாதிப்பு

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 883-ஆக உயர்ந்துள்ளது.  மேலும்,  வெளிநாடு, வெளி மாநிலங் களில் இருந்து வந்த 1,200 பேர் தனிமைப்படுத்தப்பட்டு 12 முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.