டில்லி
இன்று பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற உள்ளது.
தற்போது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த தொடர் வரும் 23 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த தொடர் தொடங்கிய பிறகு கடந்த 7 ஆம் தேதி அன்று பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது.
அப்போது மோடி நாடாளுமன்றக் கூட்டத்தில் பாஜக உறுப்பினர்கள் குறைவாக வருவதாகக் குறை கூறினார். மேலும் அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் மாற்றங்களை எதிர்கொள்ள நேரிடும் என அவர் எச்சரித்தார். இன்று மீண்டும் பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
டில்லியில் இன்று நடைபெறும் பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் பாஜகவின் அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அவசியம் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனக் கட்சித் தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.