சென்னை

ன்று தமிழகம் எங்கும் 100 இடங்களில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மாபெரும் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

இன்று 100 இடங்களில் கருணாநிதி நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் மருத்துவ முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் இந்த மருத்துவ முகாமினை தொடங்கி வைக்கிறார்.

இந்த மருத்துவ முகாம் காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை இந்த மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.  இந்த முகாம் சென்னையில் 10 இடங்களிலும், தமிழகம் முழுவதும் உள்ள மற்ற மாவட்டங்களில் 90 இடங்களிலும் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த முகாமில் ரத்த அழுத்தப் பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, எக்கோ மற்றும் இ.சி.ஜி, பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை பரிசோதனை, பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், எலும்பு மருத்துவம், மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு பிரிவுகளில் இருக்கக்கூடிய மருத்துவர்களால் ஆலோசனை வழங்கப்படும்.