மே தினம்.
இது உழைக்கும் மக்களின் உணர்வுத் திருநாள். ஒவ்வொரு நாளும் 16 மணி நேரத்துக்கும் அதிகமாக ஓய்வு ஒழிச்சலின்றி நோய் நொடிக்கு ஆளாகி, கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளான அமெரிக்க நாட்டின் தொழிலாளர்கள் 1886ம் ஆண்டு மே முதல் நாளில் சிக்காகோ நகரில் 8 மணி நேர வேலை, எட்டு மணி நேர ஒய்வு 8 மணி நேர தூக்கம் உறக்கம், என்ற கோரிக்கைகளை முன் வைத்துப் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். அப்போராட்டங்களை ஒடுக்க முற்பட்ட அமெரிக்க அரசாங்கத்தின் அடக்குமுறை காரணமாக ஒரு சில தொழிலாளர்கள் தங்களது உயிரையும் தியாகம் செய்தனர்.
அந்த போராட்டங்களும் அவர்கள் புரிந்த தியாகங்களும் இன்றி இன்றைய தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை நினைத்துப் பார்க்கவே முடியாது. இன்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் தாங்கள் போராடிப் பெற்ற உரிமைகளைப் பாதுகாத்திடவும் அவைகள் குறித்தான விழிப்புணர்வு விழிப்புணர்வு மேலோங்கிடவும் சாதியாய், மதமாய்ப் பிரிந்து கிடக்கும் தொழிலாளர்கள் ஒரு வர்க்கமாய் திரண்டிடவும் மே தின எழுச்சி அவசியமாகிறது.
மகராஷ்டிரா உருவான தினம்
இந்தியாவின் மகராஷ்டிரா மாநிலம் உருவாக்கப்பட்டது. முதல் மாநில சீரமைப்பு குழுவின் பரிந்துரைப்படி தற்போதைய மகாராட்டிர மாநிலம் மே 1, 1960இல் உருவானது. மராத்தி மொழி பெரும்பான்மையாகப் பேசும் முந்தைய பாம்பே, தக்கண் மற்றும் விதர்பா பகுதிகள் இணைக்கப்பட்டு இம்மாநிலம் உருவாக்கப்பட்டது.
மகாராட்டிர மாநிலம் இந்தியாவின் வள மிக்க மாநிலங்களில் ஒன்றாகும். நாட்டின் தொழில் உற்பத்தியில் 15% ம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.2% ம் மகராஷ்டிரா பங்களிக்கிறது.
முதல் தபால் தலை வெளியானது
பென்னி பிளாக் (Penny Black) உலகின் முதலாவது அதிகாரப்பூர்வ – ஒட்டக்கூடிய தபால் தலையாகும். இது 1840, மே 1 அன்று இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது. எனினும் மே 6ம் தேதி முதலே மக்கள் இதனை பயன்படுத்த துவங்கினர். அதற்கு முன்பாக தபால் சேவைக்கு உண்டான கட்டணம் தபால் விலாசதாதரரிடம் பட்டுவாடா செய்யப்படும்போது அவரிடமிருந்து வசூல் செய்யப்பட்டது. அம்முறையில் பல நடைமுறை சிக்கல்கள் நிலவின. தபால் சேவைக்காக முன்கட்டணம் செலுத்தப்பட்டதைக் காட்ட, ஒட்டக்கூடிய தபால்தலையைப் பயன்படுத்தும் புதிய முறையானது, ரோலண்ட் ஹில் என்பவரது, பிரித்தானிய தபால் முறைமையின் மறுசீரமைப்புக்கான 1837 ஆம் வருடத்திய திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த தபால்தலைகள் பேர்க்கின்ஸ் பேக்கன் (Perkins Bacon) என்ற நிறுவனத்தால் அச்சிடப் பட்டன.