வானிபூர்

ன்று மேற்கு வங்க மாநிலம் பவானிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்காக முதல்வர் மம்தா பானர்ஜி வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

வரும் 30 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் காலியாக உள்ள பனானிபூர், ஜாங்கிபூர், மற்றும் சாம்சர்கஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.   இதில் பவானிபூர் தொகுதியில் திருணாமுல் காங்கிரஸ் தலைவர் மற்றும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி,  ஜாங்கிபூர் தொகுதியில் ஜாகிர் உசைன் , சாம்சர்கஞ்ச் தொகுதியில் அமிருல் இஸ்லாம் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

இன்று பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.  அவரை எதிர்த்து வழக்கறிஞர் பிரியங்கா திப்ரூவல் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.   இந்த தொகுதியில் கடந்த 8 ஆம் தேதி முதல் மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி உள்ளார்.

அவரை எதிர்த்து பிரசாரம் செய்ய பாஜக நிர்வாகிகள் குவிந்து வருகின்றனர். பவானிபூர் தொகுதியில் தேர்தல் பணி பொறுப்பாளராக மேற்கு வங்க பாஜக துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.  முதல்வர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள மம்தா பானர்ஜிக்கு இந்த தொகுதியில் வெற்றி பெற வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது.