ன்னியாகுமரி

ன்று ஆடி அமாவாசை என்பதால் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை   விடப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசை என்பது தமிழகத்தில் பெருவாரியான மக்கள் நடத்தும் ஒரு சமய நிகழ்வாகும்.  இன்றைய ஆடி அமாவாசை தினத்தில் மக்கள் மறைந்த தங்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம், திதி ஆகியவை கொடுப்பது வழக்கமாகும்.   குறிப்பாக நதி மற்றும் கடற்கரையில் இது அதிக அளவில் நடைபெறுகிறது.

ஒரு சில மாவடங்களில்  உள்ளூர் விசேஷங்கள் மற்றும் திருவிழாவின் போது உள்ளூர் விடுமுறை அளிப்பது வழக்கம்.   அந்த வரிசையில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த விடுமுறையை ஈடுகட்ட செப்டம்பர் 9-ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும் என்றும் ஆடசியர் தெரிவித்துள்ளார்.