செங்கல்பட்டு

இன்றூ செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் அமைந்துள்ள ஆதிபராசக்தி கோவிலில் ங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பூர விழா மிகவும் புகழ்பெற்றதாகும். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை தரிசனம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர விழா கடந்த சனிக்கிழமை தொடங்கி திங்கட்கிழமை (இன்று) வரை கோலகலமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மேல்மருவத்தூர் ஆடிப்பூர விழாவையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 9ம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.