download (3)
கிரண் பேடி பிறந்தநாள்  (1949)
இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ். பெண்மணி.   1972ஆம் ஆண்டு  காவல்துறையில் சேர்ந்தார். டில்லி, கோவா, மிசோரம் ஆகிய இடங்களில் பணியாற்றி உள்ளார். 1971ஆம் ஆண்டில் ஆசிய பெண்கள் டென்னிசு போட்டியில் வெற்றி பெற்றவர் இவர்.
1993இல் இவர் தில்லி சிறைச்சாலைகளுக்கு பொது ஆய்வாளராக இருந்தபோது திகார் சிறைகளில்  பல  சீர்திருத்தங்கள்  செய்து  பாராட்டைப் பெற்றார். 1994ஆம் ஆண்டிற்கான ரமோன் மக்சேசே விருது விருது பெற இது  ஏதுவாய் இருந்தது. 2007ஆம் ஆண்டு இவர் விருப்பப்பணி ஓய்வு பெற்றார். 2011இல் நடந்த  அன்னா அசாரேவின்  லஞ்ச ஒழிப்பு இயக்கத்தில் இவர் குறிக்கத்தக்க பங்கு வகித்தார்.  பிறகு ஆம் ஆத்மி கட்சியில் செயல்பட்டார். பிறகு  இவர் பாரதிய ஜனதா கட்சியில் ஜனவரி 2015இல் இணைந்தார். தற்போது பாண்டிச்சேரி மாநில துணை நிலை ஆளுனராக பதவி வகிக்கிறார். பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தற்போது அங்கு மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
, நலவாழ்வு மற்றும் குற்றத்தடுப்பு காவல் குறித்து 1987ஆம் ஆண்டு நவ்சோதி என்ற அமைப்பையும் சிறை சீர்திருத்தங்கள்,போதைமருந்து தடுப்பு மற்றும் சிறுவர் நலம் குறித்து இந்தியா விஷன் பௌண்டேசன் என்ற அமைப்பையும் நிறுவியுள்ளார்.
 
download (6)
சார்லஸ் டிக்கன்ஸ் நினைவு நாள் (1870)
உலகப் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் என்றும் மறையாத காவியங்களை உருவாக்கியவர்களில் ஒருவர்.
அவர் எழுதிய பதினைந்து புதினங்களில் தி டேல் ஆப் டூ சிட்டிஸ் (இரு பெரு- நகரங்களின் கதை), கிறிஸ்துமஸ் கரோல் (கிறிஸ்துமஸ் பாட்டு) மற்றும் கிரேட் எக்ஸ்பட்டேஷன் (பெரும் எதிர்பார்ப்பு) எனும் புதினங்கள் மிகப் பிரபலமானவை. கல்லூரிப் பாட நூல்களாகவும் இவை விளங்குகின்றன.
இன்றும் அவரது புத்தகங்கள் உலக மக்களால் விரும்பிப் படிக்கப்படுகின்றன. அவரது புதினங்களில் விறுவிறுப்பான கதையோட்டம் இருக்கும். நகைச்சுவை கலந்த பேச்சிருக்கும். தரமான வசனநடை இருக்கும். கதாபாத்திரங்கள் உயிரோட்டமாகப் பேசுவார்கள். ஏழை எளியவர்களின் – உழைக்கும் மக்களின் துயரங்களை அப்படியே எடுத்துக் கூறும் சக்தி அவருக்குண்டு.
 
download (4)
நீரோ மன்னர் நினைவு நாள் (கி.பி. 68)
நீரோ குளோடியஸ் சீசர் ஆகுஸ்டஸ் ஜேர்மானிக்கஸ் ,  ஜூலியோ-குளோடிய அரசவம்சத்தின் கடைசி  ரோமப் பேரரசன்.  நீரோ அவனது மாமனான குளோடியசினால் ரோமப் பேரரசின் மன்னனாக்கும் முகமாக வளர்க்கப்பட்டவன். குளோடியசின் மறைவுக்குப் பின்னர் நீரோ அக்டோபர்   மன்னனாக முடி சூடினான்.
இவன் தனது ஆட்சிக் காலத்தில் ரோமாபுரியின் வர்த்தகம், மற்றும் ரோமின் கலாச்சாரத் தலைநகரின் விரிவு ஆகியவற்றில் மிகவும் அக்கறை கொண்டிருந்தான். நாடக மாளிகைகள் பல கட்டுவித்தான். விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னுரிமை அளித்தான். இவனது காலத்தில்பார்த்தியப் பேரரசுடன் நிகழ்ந்த வெற்றிகரமான போர், அதன் பின்னர் அப்பேரரசுடன் அமைதி உடன்பாடு  ஆகியவை முக்கியமானவை. கிபி 68 இல் ரோமப் பேரரசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மறைவிடத்தில் வாழ்ந்து வந்தான். இறுதியில் ஜூன் 9, 68 இல் கட்டாயத் தற்கொலை செய்து கொண்டு இறந்தான் ..