இன்று: ஜூன் 6

Must read

220px-AleksandrPushkin
அலெக்சாந்தர் செர்கேயெவிச் புஷ்கின் பிறந்தநாள் (1799)
ரஷ்ய மொழியின் ஒரு சிறந்த கவிஞர், நாடகாசிரியர், எழுத்தாளர். 
புஷ்கின் தனது கவிதைகளிலும் நாடகங்களிலும் உரைநடையைக் கையாள்வதில் முன்னோடியாக விளங்கியவர். அத்துடன் ரஷ்ய இலக்கியத்தில் ஒரு தனித்துவமான கதைசொல்லும் பாங்கையும் உருவாக்கியிருந்தார். இவை முன்னெப்போதுமில்லாத அளவில் பிற்கால ரஷ்ய எழுத்தாளர்களிடம் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தின.
200px-Rajamarthandan
ராஜமார்த்தாண்டன் நினைவு நாள் (2009)
தமிழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற விமர்சகர், இதழாளர், கவிஞர் இவர். இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி அருகே உள்ள சந்தையடி. அவரது கொங்குதேர் வாழ்க்கை என்னும் பெயரிலான தொகுப்பு நூல்கள் குறிப்பிடத்தக்கவை.  தினமணி  நாளிதழில் உதவியாசிரியராக பணியாற்றியவர்;  கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர். தனது இறுதிக் காலத்தில் காலச்சுவட்டில் பணியாற்றினார்.
நிறைய கவிதைகள்எழுதியிருந்தாலும், ராஜமார்த்தாண்டன் ஒரு சிறந்த கவிதை விமர்சகராகவும், திறனாய்வாளராகவும் முன்வைக்கப்படுகிறார். இவர் எழுதிய ராஜமார்த்தாண்டன் கவிதைகள் எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
 
 

More articles

Latest article