download (1)
உலக சுற்றுச்சூழல் தினம்
1972ம் ஆண்டு முதல்,  உலக சுற்றுச்சூழல் நாள் ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி  கொண்டாடப்படுகிறது.  புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோககமாகும்.  உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வோர் ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது. 
 185px-Official_Portrait_of_President_Reagan_1981
 ரொனால்ட் ரீகன் நினைவுதினம் (2004)
ரானல்ட் வில்சன் ரேகன் என்கிற  ரொனால்ட் ரீகன் ஐக்கிய அமெரிக்காவின் 40 ஆவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட பொழுது இவருக்கு வயது 69 ஆகும். இவரே அமெரிக்கர்கள் தேர்ந்தெடுத்த குடியரசுத் தலைவர்களிலேயே  வயதில் மிக மூத்தவர். அரசியலில் நுழையும் முன்னர் இவர் ஹாலிவுட்டில் நடிகராகவும்தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிகராகவும் இருந்தார். இவர் அரசியலில் ரிப்பப்லிக்கன் கட்சியைச் சேர்ந்தவர். பொதுவுடைமைக் கொள்கைகளையும் சோசலிசக் கொள்கைகளையும் கடுமையாக எதிர்த்தவர்.
 hendri
ஹென்றி நினைவுதினம்
1910) ஹென்றி புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர். இவரது உண்மையான பெயர் வில்லியம் சிட்னி போர்ட்டர் என்பதாகும்.
சிறு வயதில் இருந்தே புதினங்கள் படிப்பதில் ஆர்வமுள்ளவராக ஹென்றி இருந்தார். ஆனஆல் இவர் எழுத ஆரம்பித்தது சிறைச்சாலையில்தான். ஆம்..  சிறு திருட்டுக் குற்றத்துக்காக மூன்றாண்டு சிறையிலிருந்தார். அக்காலத்தில்தான் சிறுகதைகள்எழுதத் தொடங்கினார். அதுவே பின்னர் அவரது வாழ்க்கைத் தொழிலாயிற்று. உலகப்புகழ் பெற்ற எழுத்தாளரானார்.