டில்லி:
னது மனைவியை கொலை செய்து சடலத்துடன் உறவு கொண்டு அதன் அருகிலேயே படுத்து தூங்கிய போதை ஆசாமியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதிர்ச்சி அளிக்கும் இந்த சம்பவம், டில்லியில் நடந்துள்ளது.
டில்லியைச் சேர்ந்தவர் பிரதீப் சர்மா (வயது 25). தனது மனைவி மோனிகாவுடன் நிஹால் விஹார் பகுதியில் வசித்து வந்த இவர், தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகறாறு செய்வார்.
இந்நிலையில் வாடகை கொடுக்கவும் தாமதமானதால் வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து தம்பதி இடையே கடந்த 30ம் தேதி இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது குடிபோதையில் இருந்த பிரதீப் ஒரு செங்கல்லை எடுத்து தனது மனைவி மோனிகாவ முகத்தில் அடித்துள்ளார். மேலும் மோனிகாவின் தலையை பிடித்து சுவரில் மீண்டும் மீண்டும் மோதியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மோனிகா உயிர் பறிபோனது.
a
பிறகு மோனிகாவின் முகத்தில் இருந்த ரத்தத்தை துடைத்துவிட்டு சடலத்துடன் உறவு கொண்டுள்ளார் பிரதீப். மேலும் சடலத்தின் அருகிலேயே படுத்து தூங்கிவிட்டார்.  விடிந்தப பிறகு தான் குடிபோதையில் மோனிகாவை கொலை செய்ததை உணர்ந்தார். உடனே அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் கொலை குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து  வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரதீபை பல இடங்களில் தேடிக் கண்டுபிடித்து கைது செய்தனர்.