நெட்டிசன்

Nirmala Nimmi முகநூல் பதிவு

உலக இதய தினம்

தாயின்

கருவில் உருவாகும்

முதல் #உறுப்பே …இதயம்

இதயத்தின் வலது பக்கம்

அசுத்த ரத்தத்தை சேகரித்து

நுரையீரலுக்கு அனுப்புகிறது..

இடது பக்கமோ

சுத்த ரத்தத்தை சேகரித்து

உடல் முழுக்க அனுப்புகிறது..

பெண்களை விட

#ஆண்களையே அதிகம்

தாக்குகிறது

இந்த மாரடைப்பு…

பெண்ணின் #இனப்பெருக்க

ஹார்மோன்களான

ஈஸ்ட்ரோஜென் , ப்ரோஜெட்ரோன்

இவ்விரண்டும் பெண்களின்

இதயத்தை காக்கிறது…

அதிக #கொழுப்பை

உடலுக்குள் சேர்க்காதீர்

அது

உங்கள் உடல் எடையை

கூட்டிவிட்டு

ஆயுள் #காலத்தை

குறைத்துவிடும்… கவனம்

மாறாத மன அழுத்தமும்,

அதீத கோபமும்

#உறவுகளை மட்டுமல்ல ,

உள்ளிருக்கும் #இதயத்தையும்

சிதைத்துவிடும்…

சர்க்கரை நோயா?

இனிப்பை தவிர்த்திடு..

இனிப்பு நாக்கிற்கு நண்பன்

இதயத்திற்கு எதிரி..

அறிவாயோ..!!

உன் இதயத்தில்

புற்று வராமலிருக்க

பற்று வைக்காமலிரு

சிகரெட் மீது..!!

புகை #இதயத்திற்கும் பகை..

இதயத்திற்குள்

ரத்த ஓட்டம்

தடைப்படாமல் இருக்க

அவசியம் நீ நட…

மாரடைப்பு வராமலிருக்க

அதுவே விடை… !

300 கிராம் இருக்கும்

இதயத்தை காக்க

எண்ணெய் பலகாரத்தை

தவிர்

நார்ச்சத்து உணவை

உட்கொள்

மோதிர விரல் நீளமாக

இருப்பவருக்கு

இதய நோய் வராதாம்…

நமக்கு இரண்டு கிட்னி

இருப்பது போல்

இரண்டு இதயம் படைத்திருக்கலாம்

இறைவன் !!!

ஒன்று தெரியுமா?

ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம்…