சென்னை: நடப்பு அரையாண்டுக்கான சொத்துவரியை செலுத்த இன்றே கடைசி நாள் என்று தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி, இன்றுக்குள் செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு சொத்து வரி என்பது சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய வருடாந்திர வரி. தனிநபர்கள் தங்களுடைய வசதிக்கேற்ப ஆன்லைனிலோ ஆஃப்லைனிலோ தங்கள் சொத்து வரிகளை எளிதாகச் செலுத்தலாம். இந்த வரியானது, 6 மாதங்களுக்கு ஒருமுறை என்ற வகிதத்தில் ஆண்டுக்கு இரு முறை வசூலிக்கப்பட்டு வருகிறது. அதாவது, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களுக்கு செப்டம்பர் 30 கடைசி நாளாகாவும், அக்டோபர் முதல் மார்ச் வரையிலான 6 மாதங்களுக்கு மார்ச் 31 ஆம் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேதிகளுக்குள் சொத்து வரி செலுத்த வேண்டும். இந்த தேதிகளில் செலுத்தப்படாவிட்டால், 1% மாதாந்திர அபராதம் விதிக்கப்படும்.
அதன்படி, நடப்பு ஆண்டுக்கான (2024 அக்டோபர் . மார்ச் 2025) சொத்து வரியை இன்று செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சொத்து வரி செலுத்துவதற்கான அவகாசம் இன்றுவுடன் முடியும் நிலையில் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சொத்து வரி நிலுவை வைத்துள்ள கடைகளின் முன்பு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது.