சென்னை,
தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி இன்றுடன் முடிவடைகிறது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசு அங்கீகாரமுள்ள பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை அண்ணா பல்கலைக்கழகம் மூலம் கவுன்சிலிங் வைக்கப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது.
கடந்த 12ந்தேதி +2 தேர்வு முடிவுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து, மே 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்திருந்தது. மேலும்பூ ர்த்திசெய்த விண்ணப்பத்தை ஜூன் 3ம் தேதிக்குள் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இன்றுடன் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பபிக்கும் காலம் முடிவடைகிறது.
தமிழகத்தில் இதுவரை, சுமார் 1.50 லட்சம் பேர் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளர்.
தமிழகம் முழுவதும் சுமார் 517 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. மொத்தம் 2 லட்சம் பொறியியல் படிப்புக்கான இடங்கள் உள்ளன.
இந்தக் கல்லூரிகளுக்கான இடங்கள், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.