சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறுகிறது.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த தேர்தலில் ஒவ்வொரு வாக்காளரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவது இன்றியமையாதது.

18 வயது நிரம்பிய எந்த ஓர் இந்தியக் குடிமகனும், தேர்தலின்போது வாக்களிக்க முழு உரிமையுடையவர் ஆவார்.
இன்று நடைபெறும் தேர்தலில் வாக்காளர்கள் ஒவ்வொருவரும், தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் நம்பிக்கையின் அடிப்படையிலும், சாதி, இன, பேதம் பார்க்காமல் சமூகத்தை உயர்த்துவதற்கான உயர்ந்த தலைவனாக ஒருவரைத் தேர்தெடுக்கும் வகையில் உங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்.
இன்றைய அரசு நடைமுறைகளில் நாளைய அரசாங்க நடைமுறையை நிர்ணயிப்பது வாக்காளர்களே. தன் அரசை தானே தீர்மானிக்கும் எஜமானர்கள், வாக்காளர்களே. அரசியல்வாதிகளின் பணம், பரிசுப்பொருட்களை என எதையும் எதிர்நோக்காமல், வளமான தமிழகத்தை கட்டமைத்திட, இந்நாளில் உறுதியேற்போம்!
புதிய வாக்காளர்கள் இளம் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் அனைத்து வாக்காளர்களுக்கும் பத்திரிகை.காம் இணையதளம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது…
[youtube-feed feed=1]