உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
பெண் இறைவனின் படைப்புகளில் எல்லாம் அழகானது, மேலானது என்றார் மில்டன் என்பவர். எந்த வீட்டில் பெண்கள் கவுரவமாக நடத்தப்படுகிறார்களோ, அங்கு தேவதைகள் குடியேறும் என்பது ஐதிகம்.
அதுபோல் வீட்டில் ஒரு ஒரு பெண்ணைப் படிக்க வைப்பது ஒரு குடும்பத்தையே படிக்க வைப்பதற்கு நிகரானது என்பவர்.
அதுபோல, நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் என பெண்மையின் இலக்கணம் என்றார் மகாகவி பாரதி.
தமிழகத்தின் பெண் விடுதலைக்கான கதவுகளும் அங்கிருந்துதான் தாழ் திறந்தன.தாயாகவும், சகோதரியாகவும், மனைவியாகவும் மகளாகவும், தோழியாகவும் ஆணின் வாழ்வில் ஒரு பெண் தவிர்க்க முடியாத பந்தத்தை ஏற்படுத்தி விடுகிறாள்.
தாயை தெய்வத்திற்கும் மேலாக வைத்து வணங்கும் நமது பண்பாடு காவிரி நதியையும் தாயாகத்தான் பார்க்கிறது.
நாட்டையும் தாய்நாடாகத்தான் பார்க்கிறது.மொழியையும் தாய் மொழியாகத்தான் பார்க்கிறது.
தாய் வழியாகத்தான் அனைத்து சொந்தங்களையும் பார்க்கிறது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் பலாத்காரங்கள், குடும்ப வன்முறைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.
ஒரு பெண் நள்ளிரவில் சுதந்திரமாக நடமாடும் போதுதான் இந்த நாட்டுக்கு சுதந்திரம் வந்ததாக கருதுவேன் என்றார் தேசத்தந்தை மகாத்மா காந்தி.
சர்வதேச பெண்களை தினமான இன்று பெண்களை வாழ்த்துவோம்….
பத்திரிகை.காம்… இன்று பெண்களை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது….