ஜெனிவா,

ர்வதேச கார் கண்காட்சி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா நகரில் தொடங்குகிறது. இந்த கண்காட்சி வரும் 9ந்தேதி முதல் 19தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் 87-வது சர்வதேச கார் கண்காட்சி தொடங்கி உள்ளது.  இந்த கார் கண்காட்சியில் உலகின் முன்னணி நிறுவனங்களின் புத்தம் புதிய ரக கார்கள் இடம் பெற்று உள்ளன.

பிஎம்.டயிள்யூ, ஓபல், ஆடி, பென்ஸ், லம்போகினி, பெராரி, பிஎம்டபிள்யூ, புகாட்டி, டட்சன், ஜாகுவார், லேண்ட் ரோவர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் புதிய மாடல் கார்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த கண்காட்சி இந்த மாதம் 9ந்தேதி முதல்  19-ம் தேதி வரை நடைபெறுகிறது.

கண்காட்சியில் இடம்பெறும் கார்களில் நவீன தொழில் நுட்பமும், சொகுசு வசதியும் இடம் பெற்றுள்ளதாக கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.