தேசத் தந்தை மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியின் 150வது பிறந்த நாள் இன்று. மகாத்மா என்று இந்திய மக்களால் அன்போடு அழைக்கப்படும் காந்தியின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

காந்தியின் 150வது பிறந்தநாள் 2018ம் ஆண்டு தொடங்கியதையடுத்து  நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. வெறும் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியாக, ஒரு வழக்கறிஞராக 21 ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்து வந்த காந்தி, இந்தியாவில் பிரிட்டிஷ்காரர்களிடம் அகிம்ஷா வழியில் போராடி இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தார்.

காந்தி குஜராத் மாநிலத்தில் உள்ள “போர்பந்தர்” என்னும் இடத்தில் 1869ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் நாள் கரம்சந்த் காந்தி மற்றும் புத்திலிபாய் என்கிற தம்பதிக்கு மகனாக பிறந்தார். அவரது இயற்பெயர் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்த பெயரே பின்னாளில் மருவி காந்தி என்றானது. இன்று நம் அனைவராலும் “தேசத்தந்தை” என்று அழைக்கப்படுகிறார்.

காந்தி எதற்காக மகாத்மா ஆனார்?

இந்திய நாட்டின் சுதந்திரம் என்பது அவ்வளவு எளிதில் கிடைத்தது அல்ல. அதில் மகாத்மாவின் பங்கு போற்றத்தக்கது. ஆனால் மகாத்மா காந்தியை வெறுமனே ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியாக மட்டுமே பார்க்க முடியாது. இந்த ஒட்டுமொத்த இந்தியாவையுமே உருவாக்கியவர்,  அவரின் இதுபோன்ற செயல்களாலேயே அவர் இந்திய நாட்டின் தேசப் பிதா என இன்றும் அன்போடு போற்றப்படுகிறார்.

நம்மை எதிர்ப்பவர்களை சண்டையிட்டு வெல்லாமல் அகிம்சையின் மூலமும் வெல்லலாம் என்பதனை நிரூபித்து காட்டியவர் தான் நாம் இன்று அன்போடு “மகாத்மா” என்று அழைக்கப்படும் காந்தி அடிகள் . அவரது போராட்டக்குணம் நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய வியக்கத்தக்க ஒன்று.

ஆங்கிலேயக் காலனித்துவத்தை எதிர்த்து போரிட்டது மட்டுமல்லாது, லட்சக்கணக்கான மக்களுக்கு அகிம்சை முறையைக் கற்றுக் கொடுத்தார்.   மனிதநேயம் மகாத்மா காந்தி எழுதிய பொன்மொழிகளில் குறிப்பிடத்தக்கது மனித நேயம். அதில், மனித நேயம் என்பது ஒரு கடலை போன்றது என்பதால் அதன் மீது விழும் சிறிய கரும்புள்ளி அதனை அழித்து விடாது என அவர் கூறுவார்.

நம் வாழ்வின் ஏதேனும் ஓர் சூழ்நிலையில் துன்பத்தைச் சந்திக்க நேரிட்டாலும், மனித நேயத்தின் மீது நம்பிக்கையை இழக்கக் கூடாது. தொடர் முயற்சியே வெற்றியின் வழி விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பது தான் காந்தியின் கூற்றும்.

தனக்கான இலக்கை நிர்ணயித்து அதனை நோக்கி நகரும் மனிதன், அதில் எவ்வளவு சோதனை களைச் சந்தித்தாலும் ஒரு போதும் பின் வாங்கக் கூடாது. இதற்கு உதாரணமாக காந்தியையே எடுத்துக் கொள்ளலாம். தொடர்ச்சியான சிறைவாசம் அவருக்குத் தடங்களாக இருந்தாலும் அதனைக் கண்டு ஒருபோதும் அவர் சோர்வடையவில்லை. சுதந்திரம் என்ற இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தார், வெற்றியும் கண்டார்.

உலகம் முழுவதும் அறிந்த ஒரு மனிதர் தன் வாழ்க்கையை ஒரு எளிய ஆடை மற்றும் கையில் ஒரு கம்பு மட்டும் வைத்துக்கொண்டே தனது காலத்தை கழித்தார். பொருட்களின் மீதான நம் ஆசைகளைக் கட்டுப்படுத்தி, எளிமையான வாழ்க்கையை வாழ, அவரது வாழ்க்கை நமக்கு பாடம்.

காந்தியிடம் நீங்கள் கற்க வேண்டிய விஷயங்களில் முக்கியமான ஒன்று எண்ணமே வாழ்க்கை. மனிதன் எதனை சிந்திக்கிறானோ அதை தான் எப்போதும் செய்கிறான். ஒருவனுடைய ஆளுமையைத் தீர்மானிப்பது அவனது சிந்தனை என்றார்.

நேர்மறையாகச் சிந்திப்பவர்கள் தங்களின் இலக்குகளைச் சுலபமாக அடைவார்கள். இதுவே எதிர்மறையாகச் சிந்திப்பவன் என்றால் தன் தோல்வியை எண்ணிச் சோர்ந்து விடுவான்.

அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிக்கையில், காந்தியை “மேன் ஆப் தி இயர்” என்று குறிப்பிட்டு மகாத்மா காந்தியைப் பற்றி தகவல்கள் 1930 ஆம் ஆண்டு  பிரசுரம் செய்யப்பட்டது.

காந்திக்குப் பிடித்த எழுத்தாளர் புத்தகம் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த காந்திக்கு, மிகவும் பிடித்த எழுத்தாளராக இருந்தது லியோ டால்ஸ்டாய். ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் என்பவரோடு, காந்தி அதிக நட்புறவு கொண்டிருந்தார்.

காத்மா காந்தி, சவுத் ஆப்ரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருந்த போது அவருடைய ஊதியம் வருடத்திற்கு $15000.

காந்தியின் தாய் மொழி குஜராத்தி. மொழியின் மீது அதீத பற்று கொண்டிருந்த அவர் தனது சுயசரிதையைக் குஜராத்தியில் தான் முதன் முதலில் எழுதினார். பின் அவரது உதவியாளர்கள் மூலம் அவரது சுயசரிதை ஆங்கிலத்திற்கு மொழி மாற்றம் செய்யப்பட்டது.

உலக அகிம்சை தினம் மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதியே உலக அகிம்சை தினமாகும். இதனை உலக ஐக்கிய நாடுகள் அமை அறிவித்துள்ளது.

காந்தியின் கல்விச் சிந்தனை

1835-ஆம் ஆண்டு ஆங்கில அரசு புகுத்திய கல்வி முறைதான் பின்னர் சில மாற்றங்க ளுடன் தொடர்ந்து பின் பற்றப்பட்டது. ஆங்கில அரசின் மெக்காலே கல்வித் திட்டத்தின் சீர்கேடுகளைக் காந்தி நன்றாக உணர்ந்திருந்தார். அந்தக் கல்வித் திட்டம், பணம் படைத்தோருக்கு பணி செய்ய மட்டுமே என அவர் அறிந்திருந்தார்.

அடையாளங்களை மறைக்கும் கல்வி ஆங்கிலேயர்களால் புகுத்தப்பட்ட கல்விக் கொள்ளை நமது கலாச்சார பண்பாடுகளை, நம் முன்னோர்களின் அடையாளங்களை வேருடன் மறைத்து விடும் என்று காந்தி எதிர்த்தார்.

ஆங்கிலக் கல்வி முறை நேரடியான சமுதாய சூழ்நிலைகளிலிருந்தும் உடல் உழைப்பிலிருந்தும் நமது குழந்தைகளைப் பிரித்துவிடும் என அறிந்த அவர் ‘உண்மையான கல்வி என்பது தனிமனிதனின் மனதில் பண்பு, பொறுமை, ஞானம், உண்மை ஆகியவற்றை விதைப்பதில் அடங்கியிருக்கிறதே தவிர இலக்கிய பயிற்சியில் இல்லை’ என்று கூறினார்.

மனிதம் என்கிற புத்தகம் உண்மையான கல்வி என்பது உங்களிடமிருந்து சிறந்த எண்ணத்தை, உங்கள் ஆற்றலை வெளியேக் கொண்டுவருவதில் தான் உள்ளது. மனிதம் என்னும் புத்தகத்தை விடச் சிறந்த புத்தகம் வேறென்ன இருக்கமுடியும்? என்பதுதான் காந்தியின் அடிப்படை வாதம்.

கல்வியின் அடித்தளம் அனுபவம், கற்பதற்கான வழி சுதந்திரம் என்கின்ற டால்ஸ்டாயின் கருத்தோட்டத்தில் தான் காந்தியக் கல்வியும் இணைந்து பயணிக்கிறது. இதையே காந்தியும் வலியுறுத்தி வந்தார்.

இன்று அவரது பிறந்தநாள் உலகம் முழுவதும் அகிம்சை தினமாக கொண்டாடப்படுகிறது.

காந்தி அடிகளின் நினைவுச்சின்னங்கள் :

காந்தி மணிமண்டபம் – சென்னை கிண்டியில் காந்திக்காக தமிழக அரசு ஒரு மணி மண்டபத்தினை அமைத்து அதனை பராமரித்து வருகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் அதனை தினமும் ரசித்தப்படி உள்ளனர்.

காந்தி அருங்காட்சியகம் – மதுரையில் காந்தியின் நினைவாக ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு பொது மக்களின் பார்வைக்காக உள்ளது.

காந்தி சிலை – முக்கடலும் கூடும் குமரிக்கரையில் காந்தியின் மார்பளவு சிலை அமைக்கப் பட்டுள்ளது . மேலும் காந்தியின் நினைவாக இந்தியா முழுவதும் பல சாலைகள் மற்றும் இடங்களுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.