தூத்துக்குடி:

க்களுக்கு கேன்சர் உள்பட  பல்வேறு பாதிப்புகளை உருவாக்கி வரும் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து  போராடி வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் நடத்தி வரும் போராட்டம் 48-வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  அவர்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி பகுதி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தொடர்ந்து தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டெர்லைட்  ஆலையில் இருந்து வெளியாகும் கழிவுகள் மற்றும் புகை காரணமாக அந்த பகுதியில், புற்றுநோய், கண் நோய் ஏற்பட்டு வருவதாகவும், குறிப்பாக பெண்கள்,  குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஆலையை மூட வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் கடந்த பிப்ரவரி மாதம்  முதல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  போராட்டத்தை கையெலெடுத்து உள்ளனர்.‘

நச்சு ஸ்டெர்லைட் மூடுவது தமிழர்களின் கடமை எனவே ஒட்டு மொத் தமிழகமும் அணிதிரள வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது, அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்டிருந்த சுற்றுச்சூழல் அனுமதி இன்றுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக,  பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை 15 நாட்கள் மூடுவதாக அந்த ஆலையின் நிர்வாகம் அறிவித்தது.

எனினும் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டத்தை தொடர இருப்பதாக போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சி நிறுவனர் பொன்ராஜ் அ.குமரெட்டியபுரத்துக்கு வந்தார். அங்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை  ச.ம.க. தலைவர் சரத்குமார் இன்று சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.