ஐ பி எல் 2018 : இன்று பஞ்சாபுடன் மோதும் சென்னை

Must read

மொகாலி

ன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் போட்டியில் மோத உள்ளது.

ஏற்கனவே ஐபிஎல் 2018 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் இரு லீக் போட்டிகளில் விளையாடி உள்ளது.   முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விளையாடிய போட்டியிலும் அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் விளையாடிய போட்டியிலும் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.

மகேந்திர சிங் தோனியின் தலைமையிலான இந்த அணிக்கு கிரிக்கெட் ரசிகர்களிடையே ஒரு தனி எதிர்பார்ப்பும் அபிமானமும் உள்ளது.   தோனி, சுரேஷ் ரைனா, ரவிந்திர ஜடேஜா, ப்ளெசிஸ்,  ஷேனெ வாட்சன், கேதர் ஜாதவ் அம்பாதி ராயுடு, பிராவோ போன்ற பேட்ஸ்மென் மற்றும் அர்பஜன் சிங், ஜடேஜா, இம்ரான் தாகிர் போன்ற பந்து வீச்சாளர்களும் இந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க வைக்கின்றனர்.

அதே போல கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணியும் இரு போட்டிகளில் கலந்துக் கொண்டுள்ளது.   முதல் போட்டியில் டில்லி டேர்டெவில்ஸ் அணியை வென்றது.   இந்த அணியின் தலைவரான அஸ்வின் தலைமையில் ராகுல், மயங்க் அகர்வால், ஆரொன் ஃபின்ச், யுவராஜ் சிங்,  கருன் நாயர் , டேவிட் மில்லர், மோகித் சர்மா, முஜிபுர் ரகுமான், கிரிஸ் கேல் உள்ளிட்ட பல புகழ்பெற்ற ஆட்டக்காரர்கள் உள்ளதால் இந்த அணியும் நல்ல எதிர்ப்பார்ப்புடன் உள்ளது.

எனவே இன்றைய லீக் போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

More articles

Latest article