கொழும்பு

ன்றைய ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இலக்கை அணிக்ள் மோத உள்ளன

இன்று ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 4 சுற்றில் நடக்கும் ஆட்டத்தில் இந்தியாவும், நடப்பு சாம்பியன் இலங்கையும் மோதுகின்றன  நேற்றிரவு 11மணி வரை மாற்று நாளுக்குத் தள்ளிவைக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் ஓய்வின்றி உடனடியாக களம் இறங்க வேண்டி உள்ளது.

இந்திய அணிக்குச் சோர்வின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது தெரியவில்லை. ஆயினும் இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு பிரகாசமாகி விடும்.

சூப்பர் 4 சுற்றில் தனது முதலாவது ஆட்டத்தில் வங்காள தேசத்தைத் தோற்கடித்த தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணிக்கும் இந்த ஆட்டம் முக்கியமானதாகும். இலங்கை தொடர்ச்சியாக 13 ஒரு நாள் போட்டிகளில் வெற்றிகளை குவித்து அதே உத்வேகத்துடன் அடியெடுத்து வைக்கிறது.

இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இன்றைய ஆட்டத்தின் போதும் மழை குறுக்கிட வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.