சென்னை

ன்று நடைபெற உள்ள ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் போட்டியிடுகின்றன.

சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி நடந்து வருகிறது. போட்டியில் பங்கேற்றுள்ள 6 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இந்த லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதியை எட்டும்.

ஒவ்வொரு அணியும் நேற்று முன்தினம் வரை லா 4 ஆட்டங்களில் விளையாடி இந்தியா (10 புள்ளி), மலேசியா (9 புள்ளி) ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்று விட்டன. சீனா (1 புள்ளி) அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. எஞ்சிய இடங்களுக்கான போட்டியில் நடப்பு சாம்பியன் தென்கொரியா (5 புள்ளி), பாகிஸ்தான் (5 புள்ளி), ஜப்பான் (2 புள்ளி) ஆகிய 3 அணிகள் உள்ளன.

இன்று லீக் சுற்றின் கடைசி கட்ட ஆட்டங்கள் நடக்கின்றன. இரவு 8.30 மணிக்கு நடைபெறும் இறுதி லீக்கில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ஏற்கனவே இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்து விட்டாலும், பாகிஸ்தானுக்கு எதிரான மோதல் என்பதால் உணர்வுப்பூர்வமான எதிர்பார்ப்பும், மிகுந்த பரபரப்பும் ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்களிடமும் இயல்பாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இரு அணிகளும் நெருக்கடியை நேர்த்தியாகக் கையாள்வதைப் பொறுத்தே வெற்றிக்கனி கிட்டும். தமது பரம எதிரியான பாகிஸ்தானைத் இந்திய அணியினர் முன்பைவிட களத்தில் இன்னும் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். மேலும் உள்ளூர் ரசிகர்களின் அமோக ஆதரவு நமது அணிக்கு கூடுதல் வலு சேர்க்கும்.