கமதாபாத்

ன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அகமதாபாத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதி லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். அதாவது அரை இறுதிச் சுற்றை எட்ட குறைந்தது 6 வெற்றி அவசியமாகும்.

தற்போதைய உலகக் கோப்பையில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கத்தில் இன்று நடை பெறுகிறது.  நேற்று இரு அணியினரும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் இந்த தொடரில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற உற்சாகத்தோடு அகமதாபாத்துக்கு வந்துள்ளது. முந்தைய இரு ஆட்டங்களில் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோரின் பேட்டிங் அபாரமாக இருந்தது. பந்துவீச்சில் பும்ரா, ஜடேஜா, குல்தீப் யாதவ் கலக்கினர்.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் :-

இந்தியா.:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் அல்லது இஷான் கிஷன், விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் அல்லது முகமது ஷமி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.

பாகிஸ்தான்:

அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சாத் ஷகீல், இப்திகர் அகமது, ஷதப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி