சென்னை

மிழகத்தில் இன்று 1515 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 31,667 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1515 உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 1500 ஐ தாண்டியது இதுவே முதல் முறையாகும்.

இதில் தமிழகத்துக்கு வெளியில் இருந்து வந்தவர்கள் 18 பேர் ஆவார்கள்.

இதில் உள்நாட்டு விமானப் பயணிகள் 6 பேர் மற்றும் வெளிநாட்டு விமானப் பயணிகள் 7 பேர் ஆவார்கள்.

மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,667 ஆகி உள்ளது.

இன்று கொரோனாவால் 18 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இத்துடன் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 269 ஆகி உள்ளது.

இன்று 604 பேர் குணம் அடைந்துள்ளனர்.

குணம் அடைந்தோர் எண்ணிக்கை 16999 ஆகி உள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1156 பேருக்கு பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

சென்னையில் இது வரை 22149 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]