நடிகர் சந்திரபாபு பிறந்த தினம் 
தமிழ் திரையுலக வரலாற்றில் மறக்க முடியாத மாமனிதர் சந்திரபாபு. தனது நகைச்சுவையால் தமிழக மக்களை சிரிக்க வைத்தவர். தானே பாடலை பாடி ஆடவும் செய்வார். அவரது பாட்டை  கேட்டாலே நமக்கு ஆடத்தோன்றும். ஆனால், அவரது சொந்தகதை மிகவும் சோகமானது.

நடிகர் சந்திரபாபு
நடிகர் சந்திரபாபு

அவரைப்போல இன்னொரு கலைஞன்  தமிழகத்தில் பிறந்ததும் இல்லை, இனிமேல் பிறக்கப்போவதும் இல்லை.
தமிழக திரையுலக முக்கிய  கதாநாயகர்களுடன் ஆடிபாடி நடித்தவர். முன்னாள் கதாநாயகனும், மறைந்த முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரை, ‘மிஸ்டர் எம்ஜிஆர் ‘ என்றே கூப்பிடுவார். அதேபோல, சிவாஜிகணேசனை, வாடா, போடா என்று ஒருமையில் அழைப்பார். சினிமா சூட்டிங்கின்போது அவ்வாறு அழைப்பது அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினாலும்,  அதைப் பற்றி கவலைப்பட மாட்டார்.
ஒரு படத்தில் நடிக்க, 7 நாள் கால்ஷீட்டுக்கு ஒரு   லட்ச ரூபாய் ஊதியம் வாங்கிய ஒரே காமெடி நடிகர் சந்திரபாபுதான்.
 
download
ஃப்ரடெரிக் எங்கெல்ஸ்  நினைவு தினம்
கம்யூனிச சிந்தாந்தத்தை கார்ல் மார்க்ஸுடன் இணைந்து  வகுத்தவர் ஃப்ரடெரிக் எங்கெல்ஸ். 1820ம் ஆண்டுஜெர்மனியில் பிறந்த எங்கெல்ஸ்,
தனது தந்தையின் நூற்பு ஆலையில் பணிபுரிந்தபோது தான்,முதலாளித்துவத்தின் மீது அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது.
கார்ல் மார்க்ஸுடன் நட்பு ஏற்பட்ட பிறகு, அவருடன் இணைந்து கம்யூனிச சித்தாந்தத்தை உருவாக்கியதுடன், கம்யூனிச  அறிக்கையையும்  வெளியிட்டார்
எங்கெல்ஸ்.மேலும், கார்ல் மார்க்ஸின் மூலதனம் நூலின் பலபகுதிகளைத் தொகுத்தார். கம்யூனிச சித்தாந்தத்தின் மூலவர்களுள் ஒருவராகக் கருதப்படும் ஃப்ரெடரிக்எங்கெல்ஸ் 1895-ம் ஆண்டு இதே நாளில்தான் மறைந்தார்.
அழகி மர்லின் மன்றோ
அழகி மர்லின் மன்றோ

மர்லின் மன்றோ நினைவு தினம்
உலகப்புகழ் பெற்ற, அழகி மர்லின் மன்றோ, 1950 ஆம் ஆண்டு  நடித்த கறுப்பு வெள்ளை திரைப்படத்தின் கால் மணி நேர காட்சியொன்று கடந்த 2005ம் ஆண்டு,  1.5 மில்லியன் டாலர்களுக்கு விலைபோனது. மர்லின் முகம் தெரியாத ஏதோ நடிகர் ஒருவருடன் ஓரல் செக்ஸ் வைத்துக் கொள்ளும் காட்சி அது.
FBI-ன் பராமரிப்பில் இருந்த அந்த கால் மணி நேர படத்தை, அதிக விலைகொடுத்து வாங்கிய செல்வந்தர் தன்னை மீடியாவில் வெளிப்படுத்த விரும்பவில்லை. விற்பனை ரகசியமாக நடந்தது.
மர்லின் மன்றோ இறந்து நாற்பத்தைந்து வருடங்கள் கழித்து இத்தனை விலை கொடுத்து மர்லின் வீடியோவை வாங்கியிருக்கிறார்கள்  என்றால், அவர் உயிரோடு இருந்தபோது உலகம் அவரை  எப்படி கொண்டாடியிருப்பார்கள்!
1926 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தவர் மர்லின் மன்றோ.  மர்லினின்  அபிரிதமான அழகும், பார்த்த கணம் கலங்கடிக்கும் கவர்ச்சியும், 36 வயதில் தற்கொலை செய்துகொள்ள நேர்ந்த அவரின் மன நெருக்கடியை, ஆழமான சோகத்தை மறைக்கும் கடினமான திரைச்சீலையாகவே இன்றும் உள்ளது.
மர்லின் மன்றோ பிறக்கும்போது அவரது தாயார் கிளாடிஸ் மன்றோ பேக்கர் தனது முதல் கணவர் ஜாஸ்பர் பேக்கரை பிரிந்து எட்வர்ட் மார்டின்சன் என்பவருடன் வாழ்ந்து வந்தார்.
மர்லினின் தந்தை யார் என்ற குழப்பம் இன்று வரை நீடிக்கிறது. அப்பாவை தேடிய நீண்ட பயணமாக மர்லினின் வாழ்க்கையை எளிமையாகக் கூறலாம்.
மர்லினின் பிறப்புச் சான்றிதழில் அப்பா என்று எட்வர்ட் மார்டின்சனின் பெயரும், ஞானஸ்தான சடங்கில் அப்பா இடத்தில் ஜாஸ்பர் பேக்கரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
மர்லினின் தாயார் கிளாடிஸ் ஹாலிவுட்டிலுள்ள ஆர்.கே.ஓ. ஸ்டுடியோவல் பணிபுரிந்தபோது, அங்கு ·பிலிம் கட்டராக இருந்த ஸ்டாண்லி கிப்போர்டுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தார். அதனால் மர்லினின் தந்தை யார் என்ற கேள்விக்கு மூன்றாவது சாய்ஸாக ஸ்டாண்லி கிப்போர்டின் பெயரும் முன்மொழியப்படுகிறது.
தவிர வேறு பலரோடும் தொடர்பு இருந்ததால் தனது கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று கிளாடிஸாலேயே சொல்ல முடியவில்லை.
அப்பா என்ற உறவு வாழ்க்கையில் ஏற்படுத்திய வெற்றிடம் மர்லினு‌க்கு இறுதிவரை ஒரு அலைக்கழிப்பாக தொடர்ந்தது.
அறுபது வயதான  ஆர்தர் மில்லரோடு மர்லின் உடல் ரீதியான உறவு வைத்துக் கொண்டிருந்தாலும் அவரை டாடி என்றே அழைத்து வந்ததை இவ்வாறுதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
மர்லினின் இளமைப் பருவம் கொடியது. பிறந்த பன்னிரெண்டாவது நாளே வறுமை காரணமாக வளர்ப்பு பெற்றோர்களிடம் அவள் தாரை வார்க்கப்பட்டாள்.
பதினாறு வயது வரை வெவ்வேறு இடங்கள், வெவ்வேறு வளர்ப்பு பெற்றோர்கள் என அனாதைத்தனமான வாழ்க்கை.
இடையில் மர்லினின் தாயார் மனச்சிதைவுக்கு உள்ளாகி மனநல காப்பாகத்தில் சேர்க்கப்பட, அவள், தான் ஒருபோதும் விரும்பாத அனாதை வாழ்க்கைக்கே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
16 வயதில் நடந்த மர்லினின் முதல் திருமணமும் மகிழ்ச்சியானதாக இல்லை. வளர்ப்பு பெற்றோர்களால் நடத்தி வைக்கப்பட்ட அவசர திருமணம்  அது. 1944-ல் மர்லினின் வாழ்க்கை புதிய மாறுதலுக்குள்ளானது. டேவிட் கொனோவர் என்ற புகைப்படக் கலைஞர் Yank பத்திரிக்கைக்காக மர்லினை சில புகைப்படங்கள் எடுத்தார். மர்லினின் அபிரிதமான அழகை முதலில் கண்டுணர்ந்தவர் கொனோவரே.