இன்றைய முக்கிய செய்திகள் 01/11/16 
🔴இந்திய ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தானைச் சேர்ந்த பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்
🔴தமிழ்நாடு உருவாகி 60 ஆண்டுகள் ஆகியுள்ளதற்கு, திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
🔴வங்கதேசத்தில் 15க்கும் மேற்பட்ட இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
🔴மத்திய அரசின் டிஜிட்டல் சான்றிதழ் களஞ்சியத்தில், மாணவர்களின் சான்றிதழ் விபரங்களை பதிவு செய்யும்படி, தமிழக பல்கலைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
🔴பள்ளி வேன்களில் அழைத்து வரப்படும் மாணவர்களின் பாதுகாப்பு பணிக்காக, ஆசிரியைகளை பயன்படுத்தக் கூடாது என, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
🔴இயந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அள்ளுவது தொடர்பான வழக்கில் பதிலளிக்குமாறு, மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
🔴ரயில்கள் ஒன்றோடொன்று மோதுவதைத் தடுக்கும் மின்னணு ரயில் மோதல் தடுப்பு சாதனத்தை மேம்படுத்தும் வகையில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருவியை, மேற்கு வங்கம், கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை (ஐஐடி) சேர்ந்த விஞ்ஞானிகள் வெற்றிகரமாக சோதித்தனர்
🔴அவசரமே ஊழலுக்கு வழி வகுக்கிறது என, விஜிலன்ஸ் முன்னாள் தலைமை கமிஷனர், சங்கர் பேசினார்.ஊழல் ஒழிப்பு குறித்து, பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, தெற்கு ரயில்வேயில் முக்கிய ரயில் நிலையங்களில், விஜிலன்ஸ் விழிப்புணர்வு வார விழா, நேற்று துவங்கியது.
🔴மதுரை மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் பட்டயப் படிப்பு படித்து வந்த மாணவர் தங்கும் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
🔴திருச்செங்கோட்டில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவமனை செவிலியரின் 5 வயது மகள் நேற்று உயிரிழந்தார்.
🔴ஆதார் விவரங்களை இணைக்காத ரேஷன் கார்டுகளின் உண்மை தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என, குடிமைப்பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.
🔴பிளே ஸ்கூல் என்ற மழலை பள்ளிகள், அங்கீகாரம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, நேற்றுடன் முடிந்தது. விண்ணப்பிக்காத பள்ளிகளில், ரெய்டு நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
🔴சென்னையின் சாலையோர உணவகங்களில் மட்டன் எனக் கூறி பூனைக்கறி விற்கப்படுகிறதாம்.சமீபத்தில் பல்லாவரத்தில் அடைக்கப்பட்டிருந்த 15 பூனைகளை விலங்கு ஆர்வலர்கள் மீட்டுள்ளனர்.இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
🔴கேரளத்தில் பரவிவரும் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக தமிழகத்தில், கோவையை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் தமிழக கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 12 நோய்த் தடுப்புச் சோதனைச் சாவடிகள் தொடங்கப்பட்டுள்ளன
🔴புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய தினக்கூலி ஊழியர்கள், சம்பளம் வழங்கக் கோரி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
🔴அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராக சேரும் விவகாரம் தொடர்பாக இந்தியாவும், சீனாவும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன
🔴தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஹமாஸ் இயக்கத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.
🔴இந்தியாவுக்குள் நுழைய மேற்கு வங்கத்தை ஊடுருவல் மையமாக பயங்கரவாதிகள் பயன்படுத்தி வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
🔴டெல்லியில் இந்தாண்டு இதுவரை சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,851 ஆக உயர்ந்துள்ளது.
🔴ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேருந்து ஓட்டுனரான மன்மீத் அலிஷேரைக் கொன்றவன், மனநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்தவன் என்பது தெரிய வந்துள்ளது.
🔴கோவை நேரு ஸ்டேடியத்தில் நவ.,10ம் தேதி தேசிய ஜூனியர் தடகள போட்டியும், ஜன.,12ம் தேதி அகில இந்திய பல்கலை தடகள போட்டியும் நடத்த அதற்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 
🔴சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி 115 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
🔯 3 தொகுதிகளில் தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பணி: 50 பேர் கொண்ட காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு அமைப்பு சு.திருநாவுக்கரசர் அறிவிப்பு
🔯 மொழிவழி மாநிலங்கள் பிரிந்து 60 ஆண்டுகள் நிறைவு: தமிழக மக்களுக்கு கருணாநிதி வாழ்த்து
🔯 3 தொகுதிகளில் நடக்கவுள்ள தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 9–ந் தேதி துணை ராணுவம் வருகிறது ராஜேஷ் லக்கானி தகவல்
🔯 பாதுகாப்பற்ற நிலையில் உள்ள மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் நாளை வெடிவைத்து இடிக்கப்படுகிறது
🔯 தென் மாவட்டங்களில் இன்று அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை மைய இயக்குனர் பேட்டி
🔯 தமிழ்நாட்டுக்கு இன்று வயது 60 அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
🔯 புதுச்சேரி, நெல்லித்தோப்பு தொகுதி இடைத் தேர்தல்: காங்கிரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தி.மு.க. வரவேற்பு
🔯 சென்னையில் பங்களா வீட்டில் தனியாக வசித்த கோடீஸ்வர பெண் படுகொலை
🔯 ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாரக் கோரிய வழக்கு: இறுதி விசாரணைக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
🔯 பொதுசிவில் சட்டத்துக்கு ஆதரவாக பேட்டி: நடிகை குஷ்புவின் தனிப்பட்ட கருத்து; காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல சு.திருநாவுக்கரசர் சொல்கிறார்
🔯 3 தொகுதி தேர்தல்: புதிய தமிழகம் கட்சி புறக்கணிக்க முடிவு டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
🔯 பொதுமக்கள் ஏமாற வேண்டாம்’ ‘மின்கட்டணம் வசூலிக்க தனியார் முகவர்கள் நியமிக்கப்படவில்லை’ மின்சார வாரியம் அறிக்கை
🔯 விசாரணைக்கு ஆஜராகவில்லை: கோவை மாநகராட்சி கமிஷனருக்கு வாரண்டு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
🔯 வாக்களிக்க பணம் வாங்க மாட்டோம் என பிரகடனப்படுத்தி ‘திருப்பரங்குன்றம் பார்முலா’வை உருவாக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்
🔯 3 தொகுதி தேர்தல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போட்டி இல்லை ஜி.ராமகிருஷ்ணன் அறிவிப்பு
🈳 ‘சிமி’ பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை பா.ஜனதா–எதிர்க்கட்சிகள் இடையே மோதல் ‘‘போலி என்கவுன்ட்டர் அல்ல’’ என்று போலீஸ் விளக்கம்
🈳 ‘சிமி’ பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட விவகாரம் சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க ஒவைசி கோரிக்கை
🈳 காஷ்மீரில் தொடரும் சண்டை பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் இந்திய வீரர் உள்பட 2 பேர் பலி பெண்கள் உள்பட 4 பேர் படுகாயம்
🈳 நீதிபதிகளின் தொலைபேசி ஒட்டு கேட்கப்படுகிறது கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு
🈳 இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு சோனியா, பிரணாப் முகர்ஜி, மோடி அஞ்சலி
🈳 மானியம் இல்லாத காஸ் சிலிண்டரின் விலை திடீர் உயர்வு
🈳 வறட்சி மாநிலமாக அறிவித்தது கேரளா:மத்திய அரசிடம் நிதி கேட்க கேரள அரசு முடிவு
🈳 தீபாவளி பண்டிகை: டெல்லியில் காற்று, ஒலி மாசு பலமடங்கு அதிகரிப்பு
🌍 ஹிலாரியின் ‘இ–மெயில்’ விவகாரத்தை மீண்டும் விசாரிக்க முடிவு வெற்றி வாய்ப்பை பாதிக்குமா?
🌎 தீபாவளி கொண்டாடிய ஒபாமா ஜனாதிபதி அலுவலகத்தில் முதல் முறையாக தீபம் ஏற்றினார்
🌍 பாகிஸ்தானில் பள்ளிக்கூடம் மீது தாக்குதல்: பயங்கரவாதிகள் தப்பி ஓட்டம்
🌎 மோடியின் விருப்பங்களை நவாஸ் செரீப் நிறைவேற்றி வருகிறார்: நவாஸ் ஷெரீப் மீது இம்ரான் கான் குற்றச்சாட்டு
💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2866-2(-0.07%) 24 காரட் 10கி
30650-20(-0.07%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
45900 -100(-0.22%) பார் வெள்ளி 1 கிலோ
42875 -160(-0.37%)
💰💰 பன்­னாட்டு நிறு­வ­னங்­களை விட அதிக வருவாய் ஈட்­டிய இந்­திய நிறு­வ­னங்கள்
💰💰 வலை­தளம் மூலம் வீட்­டிற்கே வரும் ‘ஐஸ் கிரீம்
💰💰 ஆடு, மாடு விற்­ப­னையில் ஓ.எல்.எக்ஸ்., நிறு­வனம்
💰💰 ரிலையன்ஸ் பால் பிரிவு ஹெரிடேஜ் புட்ஸ் வாங்­கு­கி­றது
💰💰 சீன பொருட்கள் விற்­பனை 60 சத­வீதம் சரி­வ­டைந்­தது
🏏🏏பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் வெஸ்ட் இண்டீஸ் அணி 244 ரன்கள் சேர்ப்பு
🏏🏏 இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: ஜிம்பாப்வே அணி 373 ரன்னில் ‘ஆல்-அவுட்
🏏🏏 கிரிக்கெட் வாழ்க்கையில் ஓய்வு, திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சோகம் காரணமாக ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக், தற்கொலைக்கு முயற்சித்த தகவல் வெளியாகியுள்ளது
🏏🏏 டெஸ்ட் தரவரிசை: இந்தியா தொடர்ந்து முதலிடம்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி 115 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது
🎾🎾 டென்னிஸ் தரவரிசை: பிரஜ்னேஷ் முன்னேற்றம்
🏎🏎ஃபார்முலா 1: ஹாமில்டன் முதலிடம்