டில்லி

ன்று மக்களவையில் மத்திய ஜி எஸ் டி சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

The Union Minister for Finance and Corporate Affairs, Smt. Nirmala Sitharaman addressing a Press Conference, in New Delhi on June 28, 2021.

கடந்த வாரம் புதன்கிழமை அன்று ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் வயது வரம்பை உயர்த்த வகை செய்யும், மத்திய சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்திருத்த (இரண்டாவது திருத்தம்) மசோதாவை மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இன்று மக்களவையில் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இதில்,

“தீர்ப்பாய தலைவரின் வயது வரம்பை 67ல் இருந்து 70 ஆகவும், உறுப்பினர்களின் வயது வரம்பை 65ல் இருந்து 67 ஆகவும் உயர்த்த இந்த மசோதா வகை செய்கிறது. மறைமுக வரிகள் தொடர்பான வழக்குகளில் 10 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர், தீர்ப்பாய உறுப்பினராக நியமிக்க தகுதியுடையவர்”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.