மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகள் சந்தேகம் அளிப்பதால் ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளரிடம் வழங்கவேண்டும் : இந்தியா கூட்டணி தீர்மானம்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகள் சந்தேகம் அளிக்கும் வகையில் இருக்கிறது என கூறி புதிய நடைமுறையை வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வி வி பேட் என்னும் ஒப்புகைச்சீட்டு எந்திரத்தின் மூலம் ஒரு வாக்காளர் எந்த சின்னத்திற்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

இந்த ஒப்புகைச் சீட்டுகள் எந்திரத்தின் உள்ளே சேமிக்கப்படும் ஆனால் அது போன்று இல்லாமல் அந்த ஒப்புகை சீட்டுகள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் அதனை சரிபார்த்த பின்னர் அதற்கென்று இருக்கும் தனியான ஒரு வாக்கு பெட்டியில் செலுத்தும் வகையில் நடைமுறையை மாற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.