சென்னை

ன்று தமிழகம் முழுவதும் இன்று மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது.  இதைத் தடுக்க இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.   தவிர வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 தினங்களிலும் அனைத்து வழி  பாட்டு தலங்களிலும் பக்தர்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதுவரை 2 ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கு முடிவடைந்துள்ளது.

தற்போது மூன்றாம் ஞாயிறு ஊரடங்கு நேற்று இரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது    இந்த 31 மணி நேர ஊரடங்கை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  இதில் சென்னை நகரில் மட்டும் 10,000 பேர் பணியில் உள்ளனர்.

சென்னையில்  காவல்துறையினர் 320 வாகன சோதனைச் சாவடிகள் அமைத்துத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.  மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித் திரிவோரைத் தடுத்து அவர்கள் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.