மும்பை

கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து முதல் முறையாக இன்று மும்பை நகரில் கொரோனா பாதிப்பால் ஒருவர் கூட மரணம் அடையவில்லை.

இந்தியாவில் கொரோனா பரவல் முதல் மற்றும் இரண்டாம் அலையால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்றாகும்.   அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.  குறிப்பாக மும்பை நகரில் அனைத்து பெருநகரங்களில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு இருந்தது.

இதையொட்டி மகாராஷ்ட்டிர அரசு கடும் நடவடிக்கைகள் எடுத்து கொரோனா பாதிப்பு மற்றும் மரண எண்ணிக்கையை மிகவும் குறைத்துள்ளது.    குறிப்பாக இந்தியாவின் வர்த்தக நகரம் எனக் கூறப்படும் மும்பை நகரில் கொரோனா பாதிப்பு மற்றும் மரணம் வெகுவாக குறைந்துள்ளது.

இன்று மும்பையில் 367 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இன்று மும்பையில் ஒருவர் கூட கொரோனாவால் உயிர் இழக்கவில்லை.   கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து இன்று முதல் முறையாக மும்பை நகரில் கொரோனாவால் ஒருவர் கூட மரணம் அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மும்பை நகரில் இன்று 367 பேர் பாதிக்கப்பட்டு இதுவரை 7,50,,808 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று ஒருவர் கூட உயிர் இழக்காத நிலையில் இதுவரை 16,180  பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 518 பேர் குணமாகி மொத்தம் 7,27,084 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 5.030 பேர் சிகிச்சையில் உள்ளனர்.