டொமினிகா

ன்று டொமினிகாவில் இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் இடையே முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது/

மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.  இதில் டெஸ்ட் தொடர் முதலில் நடத்தப்படுகிறது.  இன்று இந்தியா- மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் தொடங்குகிறது.

இத்தொடர் 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் அந்த வகையில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.  கடந்த சில தினங்களாக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்திய அணியினர் வெற்றியோடு தொடங்கும் வேட்கையுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சோபிக்க தவறியதால் புஜாரா அணியில் இருந்து தடாலடியாகக் கழற்றி விடப்பட்டார். தவிர மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, உமேஷ் யாதவும் இடம்பெறவில்லை.

மேலும் ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் காயத்தில் இருந்து மீளவில்லை. எனவே இவர்களுக்குப் பதிலாக இந்த தொடருக்கான இந்திய அணியில் சில புதுமுக வீரர்கள் இடம்  பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.