சென்னை

ன்று பூவை ஜெகன்மூர்த்தி எம் எல்  ஏவின் முன் ஜாமீன் மனு மீது மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.

திருத்தணி அருகே உள்ள களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவகாரத்தில் தனுஷின் சகோதரரை கடத்தியது தொடர்பாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தியை போலீசார் தேடினர். எனவே அவர் முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

முன் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி பூவை ஜெகன்மூர்த்திக்கு உத்தரவிட்டு கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமை கைது செய்து விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். ஜெயராமிடம் விசாரணை நடத்திய போலீசார் விசாரணைக்கு பின்பு அவரை விடுவித்தனர்.

உச்சநீதிமன்றத்தில் தனக்கு எதிராக பிறப்பிக்கப்படட உத்தரவை எதிர்த்து கூடுதல் டி.ஜி.பி. ஜெயராம் மனு தாக்கல் செய்தார்.  மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டார். பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிபதி வேல்முருகனிடம் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு மாற்றப்பட்டது.

அந்த முன்ஜாமீன் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் நேற்று  விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு தரப்பில் விசாரணையை தள்ளிவைக்க கோரப்பட் டது. இதையொட்டி, விசாரணையை இன்று (வெள்ளிக்கிழமை) தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.