சென்னை
பராமரிபு பணிகள் காரணமாக இன்று சென்னைகடற்கரை – தாம்பரம் இடையே மின்சர ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில்,
”தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும் இன்று காலை 7 முதல் மாலை 5 மணி வரை மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
அதே சமயம் பயணிகளின் வசதிக்காக சென்னை கடற்கரை பல்லாவரம் இடையே இரு மார்க்கத்திலும் காலை 6.15 மணி முதல் மாலை 5.05 மணிவரை வரை 20 முதல் 30 நிமிட இடைவெளியில் மொத்தம் 35 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
இப்பணிகள் முடிவடைந்த பின்னர் மாலை 5 மணி முதல் ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் ”
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Patrikai.com official YouTube Channel