சென்னை

ன்று தமிழக சட்டப்பேரவையில் மாற்றுத் திறனாளிகள் நலன், உள்ளிட்ட விவாதங்கள் நடைபெற உள்ளன.

தமிழகத்தில் சமீபத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  இதில்  மாற்றுத் திறனாளிகளின் குறைந்த பட்ச எதிர்பார்ப்பை கூட அரசு பூர்த்தி செய்யவில்லை என அதிருப்தி நிலவுகிறது.    இது குறித்துப் பல சங்கங்கள் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.  இந்நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டத்தில் நடைபெறும் விவாதங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இன்று சட்டப்பேரவையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கை குறித்து விவாதம் நடைபெற உள்ளது.  குறிப்பாக மாற்றுத் திறணாளிக்ள் நலத்துறையைத் தன்வசம் வைத்துள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இது குறித்து இன்று அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்ப்பு உள்ளது.

இன்றைய விவாதக் கூட்டத்தில் முதல்வர் மு க ஸ்டாலினுடன் மற்ற அமைச்சர்கள் முத்துசாமி மற்றும் கீதா ஜேவன் ஆகியோரும் பங்கு கொள்கின்றனர்.  எனவே இஅவரக்ள் விவாதத்துக்குப் பதில் அளிப்பதுடன் பல முக்கிய அறிவிப்புக்களை வெளியிட உள்ளதாக அரசு தரப்பு தெரிவிட்துள்ளது

.