ஈரோடு: தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று ஈரோட்டில் நடைபெற்று வரும் நிலையில், வரவேற்று பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மக்கள் பணியாற்றும் தலைவராக அன்று புரட்சி தலைவர் இருந்தார், இன்று புரட்சி தளபதி விஜய் இருக்கிறார் என புகழாரம் சூட்டினார்.

ஈரோட்டில் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று காலை 11மணி அளவில் தொடங்கியது. இக்கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்ற த.வெ.க. தலைவர் விஜய்க்கு விமான நிலையத்தில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்களை பார்த்து விஜய் கையசைத்தபடி வந்தார்.
அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக கூட்டம் நடைபெறும் விஜயமங்கலத்திற்கு வந்தடைந்தார். இதையடுத்து, மக்கள் சந்திப்பு கூட்டம் தொடங்கியது. மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் தவெக மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வரவேற்றுபேசினார். அபபோது, , “கடலென கூடியுள்ள கூட்டத்தை பார்க்கும்போது வரலாறு படைக்கும் கூட்டமாக தெரிகிறது. வரலாற்றை படைப்பதற்கு இங்கு பெருந்திரளாக வந்திருக்கிறீர்கள். அதோடு மட்டுமல்ல சில பேர் நினைக்கிறார்கள்.
தலைவரை பொறுத்தவரையில் மனிதநேயம் மிக்கவர். நல்லவர். வல்லவர். உங்களுக்காக வாழ்ந்து கொண்டு இருப்பவர் என்பதை மறந்து விடக்கூடாது. ஏன் என்று சொன்னால் ஒரு ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருவாய், அதை தேவையில்லை என்று விட்டுவிட்டு மக்களுக்கு பணியாற்ற ஒரு தலைவர் வந்திருக்கிறார் என்று சொன்னால் உலக வரலாற்றில் புரட்சி தலைவரை பார்த்தேன். இன்றைக்கு புரட்சி தளபதியை காண்கிறேன்.
உங்களை பொறுத்தவரையிலும் எதிர்காலம் பிரகாசம் உள்ள எதிர்காலமாக மாறப்போகிறது. நாளை தமிழகத்தை ஆள போவது தளபதி தான் என்றவர், 234 தொகுதிகளிலும் தவெக தலைவர் யாரை விரல் காட்டுகிறோரோ, அவர்தான் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர் என்ற சாதனையை படைக்கும் அளவிற்கு வெற்றியைத் தேடித் தாருங்கள்”
இவ்வாறு கூறினார்.