புதுச்சேரி

ன்று புதுச்சேரியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்

வரும் 19 ஆ தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. இன்னும் 12 நாட்களில் வாக்குப்பதிவு நடக்க உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதில் புதுச்சேரியில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் மீண்டும் போட்டியிடுகிறார்.

வைத்திலிங்கத்தை ஆதரித்து ‘இந்தியா’ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வகையில் கடந்த 31 ஆம் தேதி தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து புதுச்சேரியில் தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று  காலை 9 மணிக்கு பிரசாரம் மேற்கொள்கிறார். கூட்டத்தில் வேட்பாளர் வைத்திலிங்கம் மற்றும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.