கொழும்பு

ன்று நடைபெறும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் இணைந்து 16-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துகிறது. இந்த போட்டியில் 6 அணிகள் பங்கேற்கின்றன  போட்டியின் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தன.

இந்த சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முடிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இன்று இந்த போட்டி தொடரில் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா விளையாட்டரங்கத்தில் நடக்கும் சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.  இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பல்லகெலேயில் மோதிய லீக் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது.

4 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்விரு அணிகளும் சந்தித்த ஆட்டம் ரத்தானதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். ஆகவே சூப்பர் 4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் மாற்றுத் தினமான (ரிசர்வ் டே) அடுத்த நாளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.