சென்னை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் துயரம் அடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்தன.  சமீபகாலமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.

ஆயினும் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக தேர்தல் காரணமாக விலை உயர்த்தப்படவில்லை.  தேர்தல் முடிந்த ஒரே வாரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.   கடந்த 8 நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 7 ஆம் முறையாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது.

இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ.105.94 என விற்கப்படுகிறது.  இதைப் போல் டீசல் விலை லிட்டருக்கு 67 காசுகள் உயர்ந்து ரூ.96க்கு விற்பனை செய்யப்படுகிறது.    இவ்வகையில் கடந்த 8 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.4.54 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.4.57 என விலை  அதிகரிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டில்லியில் தற்போது பெட்ரோல் விலை ரூ.1௦௦க்கும் அதிகமாகி உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் மக்கள் கடும் துயர் அடைந்துள்ளனர்.