சென்னை
தொடர்ந்து இரண்டாம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது.
ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் காரணமாகக் கடந்த சில மாதங்களாக விலை உயராமல் இருந்தது. தேர்தல்கள் முடிந்துள்ளதால் நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 137 நாட்களுக்குப் பிறகு உயர்த்தப்பட்டது.
இன்றும் தொடர்ந்து இரண்டாம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.0.75 காசுகள் உயர்ந்து தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல்விலை ரூ.10.2.91 ஆகியுள்ளது.
இதைப் போல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.0.76 காசுகள் உயர்ந்துள்ளது. இன்று ஒரு லிட்டர் டீசல் ரூ.92.95க்கு விற்கப்படுகிறது.