சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 2,596 பேரும் கோவையில் 3,990 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 27,936 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 20,96,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 24,232 பேர் உயிர் இழந்து 17,70,503 பேர் குணம் அடைந்து தற்போது 3,01,781 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 2,596 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,04,502 பேர் பாதிக்கப்பட்டு 7,091 பேர் உயிர் இழந்து 4,63,489 பேர் குணம் அடைந்து தற்போது 33,922 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்றும் இங்கு 3,990 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உ ள்ளது.

இதுவரை கோவை மாவட்டத்தில் 1,70,497 பேர் பாதிக்கப்பட்டு 1,274 பேர் உயிர் இழந்து 1,30,029 பேர் குணம் அடைந்து தற்போது 39,922 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையிலும் கோவை முதல் இடத்தில் உள்ளது.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,40,526 பேர் பாதிக்கப்பட்டு 1,836 பேர் உயிர் இழந்து 1,28,649 பேர் குணம் அடைந்து தற்போது 10,041 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

patrikaidotcom, tamil news, Corona, TN, affected, district wise, கொரோனா, தமிழகம், பாதிக்கப்பட்டோர், மாவட்டம் வாரி, 31/05/2021