சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 2,217 பேரும் கோவையில் 3,061 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 25,317 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 21,48,346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 25,205 பேர் உயிர் இழந்து 18,34,439 பேர் குணம் அடைந்து தற்போது 2,88,702 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 2,217 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,09,234 பேர் பாதிக்கப்பட்டு 7,222 பேர் உயிர் இழந்து 4,72,186 பேர் குணம் அடைந்து தற்போது 29,826 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்றும் இங்கு 3,061 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உ ள்ளது.

இதுவரை கோவை மாவட்டத்தில் 1,76,910 பேர் பாதிக்கப்பட்டு 1,345 பேர் உயிர் இழந்து 1,36,453 பேர் குணம் அடைந்து தற்போது 39,112 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையிலும் கோவை முதல் இடத்தில் உள்ளது.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,42,715 பேர் பாதிக்கப்பட்டு 1,924 பேர் உயிர் இழந்து 1,31,409 பேர் குணம் அடைந்து தற்போது 9,382 பேர் சிகிச்சையில் உள்ளனர்.