டில்லி

ன்று அனைத்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. 

இன்னும் சில மாதங்களில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.  இந்தியத் தேர்தல் ஆணையம் இதற்கான முன்னேற்பாடு பணிகளை  மேற்கொண்டு வருகிறது.

எனவே ந்று டில்லியில் அனைத்து மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளும் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் தொடங்குகிறது.  இந்த கூட்டம் 2 நாட்கள். கூட்டத்தில் பங்கேற்க தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு டில்லி  சென்றுள்ளார்.

கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலமும் மேற்கொண்டுள்ள நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் பற்றி ஆய்வு செய்யப்படும். மேலும் இறுதி வாக்காளர் பட்டியல், 25 ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய வாக்காளர் தினம் ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த கூட்டம் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் நடைபெறுகிறது. இந்தியத் தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திரபாண்டே, மற்றும்  அருண்கோயல் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.