டில்லி

டில்லியில் இன்று 956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,49,460 ஆகி உள்ளது.

டில்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

இன்று 956 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 1,49,460 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இன்று டில்லி யில் கொரோனாவால் 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை கொரோனாவால் 4,167 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 913 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 1,34,318 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 10,975 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஐந்தாம் இடத்தில் உள்ளது.