சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 935  பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 9,140 ஆகி உள்ளது

இன்று சென்னையில் 935 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,25,009 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 27 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 7,826 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 1,589 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,08,043 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 9,140 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 14,016 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 23,53,721 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தமிழக தின்சரி கொரோனா பாதிப்பில் கோவை 1,895 உடன் முதல் இடத்தில் உள்ளது.