மும்பை
இன்று மகாராஷ்டிராவில் 9,000 மற்றும் கேரளா மாநிலத்தில் 13,956 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று 9,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 62,14,190 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 180 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 1,27,031 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 5,756 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 59,80,350 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,03,486 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
கேரளா மாநிலத்தில் இன்று 13,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 31,60,937 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 81 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 15,350 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 13,613 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 30,20,052 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,25,039 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.